உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஏழை குழந்தைகள் தரமான கல்வி பெற வலுவூட்டல் பயிற்சி

ஏழை குழந்தைகள் தரமான கல்வி பெற வலுவூட்டல் பயிற்சி

திருச்செங்கோடு, திருச்செங்கோடு வட்டார வள மையத்தில், ஆறு முதல், ஒன்பதாம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கான, 'திறன் பயிற்சி' முகாம், இரண்டு நாட்கள், இரண்டு கட்டங்களாக நடந்தது. வட்டார கல்வி அலுவலர் பழனிசாமி தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சதீஸ்குமார் தொடங்கி வைத்தார். ஆசிரியர் பயிற்றுனர்கள் ரகுபதி, ரேவதி, உதயபானு, மகேஸ்வரி ஆகியோர் கருத்தாளர்களாக செயல்பட்டனர். மாநில திட்ட இயக்குனரக இணை இயக்குனர் முருகன், பயிற்சியை ஆய்வு செய்தார்.அப்போது அவர் பேசியதாவது:பல்வேறு விதமான திட்டங்கள் தீட்டப்பட்டு, அடிப்படை கல்வியை, மொழியை கையாளும் அறிவை, கணிதத்திறனை மேம்பாடு செய்யும் நோக்கிலும், ஒவ்வொரு மாணவருக்கும் தரமான கல்வி பூரணமாக கிடைக்க வகை செய்ய வேண்டும் என்பதற்காக, ஆண்டுதோறும் பள்ளி கல்வித்துறை மிகுந்த அக்கறையுடனும், சிரத்தையுடனும் கல்வியாளர்களை கொண்டு பயிற்சிகளை திட்டமிட்டு வழங்கி வருகிறது.'திறன்' பயிற்சியானது, அரசு பள்ளியில் படிக்கும் ஏழை, எளிய மக்களின் குழந்தைகள், தரமான கல்வியை பெற வேண்டும் என்பதற்காக, பிரத்யேகமாக அடிப்படை திறன் வலுவூட்டலுக்கு இப்பயிற்சி வழங்கப்படுகிறது. இப்பயிற்சியில் கலந்துகொண்டுள்ள அனைத்து ஆசிரியர்களும், உங்களால் இலக்குகளாக மதிப்பீடு செய்யப்பட்டிருக்கும் மாணவர்களுக்கு, தனி ஆர்வத்துடன் வகுப்பறை பாட திட்டங்களை வகுத்து, கற்றல் இடைவெளியை சரி செய்யவும், அந்தந்த வகுப்புக்குரிய திறன்களை பெறவும் ஆவன செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி