உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / படித்துறை சுற்றிலும் மீண்டும் ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பு

படித்துறை சுற்றிலும் மீண்டும் ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பு

பள்ளிப்பாளையம், பெரியார்நகர் பகுதியில் ஆற்றங்கரையோரம் உள்ள படித்துறையை சுற்றிலும் மீண்டும் ஆகாயத்தாமரை செடிகள் படர்ந்துள்ளதால், துணி துவைக்க வரும் மக்கள் அவதிப்படுகின்றனர்.பள்ளிப்பாளையம் அடுத்த பெரியார்நகர் பகுதியில், காவிரி கரையோரத்தில் பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவும், துணி துவைக்கவும் படித்துறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த படித்துறை அப்பகுதி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இந்த படித்துறை சுற்றிலும், கடந்த இரண்டு மாதமாக ஆகாயத்தாமரை செடிகள் படர்ந்தது காணப்பட்டது. கடந்த, 10 நாட்களுக்கு முன் காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், இந்த படித்துறை சுற்றிலும் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது இந்நிலையில், மீண்டும் படித்துறையை சுற்றிலும் ஆகாயத்தாமரை செடிகள் படர்ந்துள்ளது. இதனால், பொதுமக்கள் துணி துவைக்கவும், குளிக்கவும் மிகவும் அவதிப்படுகின்றனர். இதை அகற்ற குமாரபாளையம் நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி