மக்களை அச்சுறுத்திய விஷ வண்டுகள் அழிப்பு
ப.வேலுார்:ப.வேலுாரை சேர்ந்தவர் தில்லைகுமார், 50; இவரது விவசாய தோட்டம், படமுடிபாளையத்தில் உள்ளது. நேற்று முன்தினம், இவரது தோட்டத்தில் கூலி தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் இருந்த நாவல்பழம் மரத்தில் கூடு கட்டியிருந்த விஷ வண்டுகள், அந்த வழியாக சென்ற பொதுமக்கள், தொழிலாளர்களை துரத்தி துரத்தி கொட்டின. வலி தாங்க முடியாமல், அனைவரும் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். தகவலறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினர், நேற்று சம்பவ இடத்திற்கு சென்று விஷ வண்டுகளை அழித்தனர். இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர்.