வளைவு சாலையில் பள்ளத்தால் அச்சம்
மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் அருகே, மாரம்பாளையம் வளைவு சாலையில் மிகப்பெரிய அளவில் பள்ளம் உருவாகியுள்ளது. இந்த வழியாக ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும், ராசிபுரம் -சங்ககிரி செல்ல, குறுக்குவழி சாலை என்பதாலும் அதிகளவில் வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையோர பள்ளத்தால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணித்து வருகின்றனர். சில சமயம் விபத்தும் நடந்துள்ளது. எனவே, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், சாலையோர பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.