உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

நாமக்கல், நாமக்கல் மாவட்ட தீயணைப்புத்துறை சார்பில், தீவிபத்து தடுப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வு மற்றும் ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில், மாவட்ட தீயணைப்பு அலுவலர் அப்பாஸ் தலைமையில், உதவி மாவட்ட அலுவலர் தவமணி உள்ளிட்ட குழுவினர், தீ தடுப்பு ஒத்திகையை நிகழ்த்தி காட்டினர். அதில், டாக்டர்கள், மருத்துவ அலுவலர்கள், ஆம்புலன்ஸ் டிரைவர்கள், துாய்மை பணியாளர்கள், மாணவ, மாணவியர், பொதுமக்கள் முன்னிலையில் மின் கசிவால் ஏற்படும் தீ விபத்து, காஸ் சிலிண்டர் மூலம் ஏற்படும் தீ விபத்து, மாடியில் உள்ள அலுவலகங்கள், குடியிருப்புகளில் ஏற்படும் தீ விபத்து உள்ளிட்டவைகளில் முன்னெச்சரிக்கையாக என்ன செய்ய வேண்டும், மேலும், தீ பரவாமல் தடுக்கும் நடவடிக்கை ஆகியவை குறித்து செயல் விளக்கமளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை