மேலும் செய்திகள்
சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
20-Aug-2025
நாமக்கல், நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன் கோவிலில், கும்பாபிஷேகம் முடிந்து ஓராண்டு நிறைவு பெற்றது. இதையடுத்து, நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு அம்மனுக்கு சங்காபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, காலை, 9:00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடந்தது. மாலை, 6:00 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில், ஊஞ்சல் உற்சவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராமான பக்தர்கள் பலப்பட்டரை மாரியம்மனை தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
20-Aug-2025