உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அச்சிடப்பட்ட பேப்பர்களில் உணவு பொருட்கள் வழங்கக் கூடாது: கலெக்டர்

அச்சிடப்பட்ட பேப்பர்களில் உணவு பொருட்கள் வழங்கக் கூடாது: கலெக்டர்

நாமக்கல், நாமக்கல் கலெக்டர் துர்காமூர்த்தி வெளியிட்ட அறிக்கை:தினசரி மக்கள் கூடும் ஓட்டல்கள், பேக்கரிகள் மற்றும் டீ கடைகளில் வழங்கப்படும் உணவு பதார்த்தங்களை, பழைய அச்சிடப்பட்ட காகிதங்கள், பேப்பர் மற்றும் பிளாஸ்டிக் கவர்களில் வழங்குவது, தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.பெட்டி கடைகள், டீ கடைகள், ஓட்டல்கள் மற்றும் வீடுகளில் கூட வடை, பஜ்ஜி, போண்டா, பக்கோடா, இறைச்சி, மீன்கள் போன்ற உணவை, அச்சிடப்பட்ட காகிதங்களில் வைத்து எண்ணெய் பிழிவது போன்ற செயல் சுகாதாரமற்றது.உணவு பொருளுடன் அச்சிடப்பட்ட காகிதங்களில் உள்ள மை, உடல் பாதிப்பையும், எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்தும். அச்சிடப்பட்ட காகிதங்களின் மையில் உள்ள கனிம வேதி பொருள்களான அரைல் அமீன்கள், நுரையீரல் மற்றும் சிறுநீர் பை கேன்சரை உருவாக்கும்.சாலையோர உணவு வணிகர்கள், தள்ளுவண்டி கடைகள் மற்றும் இரவு நேரம் மட்டும் செயல்படும் உணவு கடைகள், சில்லி கடைகள் மற்றும் சமையல் கேட்டரிங் சர்வீஸ் உட்பட அனைத்து உணவு வணிகர்களும், உணவு பாதுகாப்பு தரச் சட்டத்தின்படி, உணவு பாதுகாப்பு லைசென்ஸ் அல்லது பதிவு சான்றிதழ் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.இது குறித்து புகார் இருந்தால், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின், 94440 42322 என்ற 'வாட்ஸ்ஆப்' எண்ணிற்கு, பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ