உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ப.வேலுார் மீன் மார்க்கெட்டில் உணவு பாதுகாப்புத்துறை ஆய்வு

ப.வேலுார் மீன் மார்க்கெட்டில் உணவு பாதுகாப்புத்துறை ஆய்வு

ப.வேலுார்: ப.வேலுார் பஸ் ஸ்டாண்ட் அருகே, தினசரி மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. அங்கே விற்கப்படும் மீன்கள் தரம் குறைவாக இருப்பதாகவும், கெட்டுப்போன மீன் இருப்பதாகவும், நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் தங்க விக்னேஷூக்கு புகார் சென்றது. அவரது உத்தரவுப்படி, நேற்று ப.வேலுார் உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துசாமி தலைமையில் மீன் மார்க்கெட்டில் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது, மீன் மார்க்கெட்டில் பணியாளர்கள் சுகாதாரமற்று இருந்ததாகவும், உணவு பாதுகாப்பு பதிவு சான்று பெறவில்லை என்பதும் தெரியவந்தது. அவர்களிடம், கெட்டுப்போன மீன்களை விற்கக் கூடாது என, அறிவுரை வழங்கினர். மேலும், உணவு பாதுகாப்பு முறைகளை கடைப்பிடிக்காத மீன் கடைக்காரர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை