மேலும் செய்திகள்
ராசிபுரம் அருகே சாலை விபத்தில் 3 பேர் பலி
22-Nov-2024
ராசிபுரம்: நாமகிரிப்பேட்டை அருகே, பஸ் - லாரி மோதிய விபத்தில் காயமடைந்தவர்களுக்கு, முன்னாள் அமைச்சர் சரோஜா உதவி வழங்கினார். நாமகிரிப்பேட்டை அடுத்த கோரையாறு பகுதியில் கடந்த, 22ம் தேதி பஸ்-லாரி மோதிக்கொண்டதில், மூன்று பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 17க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்கள் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். சிலர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சரோஜா விபத்தில் படுகாயம் அடைந்தவர்களின் வீடுகளுக்கு சென்று நலம் விசாரித்து, ஆறுதல் கூறினார். மேலும், பழங்களை வழங்கி மருத்துவ செலவுக்கு நிதி உதவி வழங்கினார்.
22-Nov-2024