மேலும் செய்திகள்
கண் மருத்துவ முகாம் 60 பேர் பங்கேற்பு
14-Oct-2025
திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில், ரோட்டரி சங்கம், ரோட்டரி இன்னர் வீல் சங்கம், கே.எஸ்.ஆர்., காலேஜ் ஆப் டெக்னாலஜி மற்றும் ஜெம் மருத்துவமனை இணைந்து, அரசு பெண்கள் மேல்நிலைப்-பள்ளியில், இலவச மருத்துவ முகாம் நடத்தின. ரோட்டரி சங்க தலைவர் செல்வக்குமார் தலைமை வகித்தார்.இன்னர் வீல் சங்க தலைவர் கவிதா வரவேற்றார். ஜெம் மருத்து-வமனை டாக்டர் நவநீதராகவன், டாக்டர் சுதர்சன் ஆகியோர் தலைமையில் மருத்துவ குழுவினர், உணவுக்குழாய், இரைப்பை, குடலிறக்கம், மலக்குடல், பெருங்குடல், கல்லீரல், கணையம், கணைய அலர்ஜி, குடல் புண், மூலம், பித்தப்பை கற்கள், மஞ்சள் காமாலை மற்றும் குடல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனை மற்றும் சிறப்பு சிகிச்சை வழங்கினர். ஆபரேஷன் தேவைப்படுவோருக்கு, 50 சத-வீத கட்டண சலுகை வழங்கப்பட்டது. நுாற்றுக்கணக்கானோர் முகாமில் கலந்து கொண்டனர். ரோட்டரி சங்க முன்னாள் தலை-வர்கள் நவமணி, ஜெகதீசன், சண்முகசுந்தரம், செயலாளர்கள் சர-வணன், பிரியா உள்ளிட்ட ரோட்டரி சங்க நிர்வாகிகள் பலர் கலந்-துகொண்டனர்.
14-Oct-2025