உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நீட் தேர்வு விண்ணப்ப பதிவில் அடிக்கடி எரர் ஆசிரியர்கள் தடுமாற்றம்; மாணவர்கள் பரிதாபம்

நீட் தேர்வு விண்ணப்ப பதிவில் அடிக்கடி எரர் ஆசிரியர்கள் தடுமாற்றம்; மாணவர்கள் பரிதாபம்

'நீட்' தேர்வு விண்ணப்ப பதிவின்போது அடிக்கடி, 'எரர்' ஏற்ப-டுவதால், ஆசிரியர்களே தடுமாறும் நிலையில் அரசு பள்ளி மாணவ, மாணவியர் நிலை பரிதாபமாக உள்ளது.எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் சேர, 'நீட்' நுழை-வுத்தேர்வு, தேசியத்தேர்வு முகமையால் ஆண்டுதோறும் நடத்தப்-படுகிறது. நடப்பு கல்வி ஆண்டு, 'நீட்' தேர்வு, மே, 4ல் நடக்க உள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு, கடந்த, 7ல் தொடங்கி-யது. மார்ச், 7 வரை விண்ணப்பிக்க அவகாசம் உள்ளது. ஆனால், நடப்பு ஆண்டு விண்ணப்ப பதிவில் பல்வேறு மாற்றங்கள் செய்-யப்பட்டுள்ளன.ஏ.பி.சி., - ஐ.டி., புகைப்பட பதிவேற்றம், கையொப்பம், கைரேகை பதிவேற்றம் ஆகியவற்றில் பல முறை, 'எரர்'களாக வருவதால், ஒவ்வொரு விண்ணப்பத்துக்கும் பல மணி நேரம் போராட வேண்டியுள்ளது. இதனால் அரசு பள்ளி மாணவ, மாண-வியர், விண்ணப்பிக்க முடியாமல் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்-டுள்ளனர். மேலும் பல அரசு பள்ளியில் உள்ள கம்ப்யூட்டர்களில் போதுமான வசதியில்லாததும் காரணம் என கூறுகின்றனர்.இதுகுறித்து பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் கூறியதாவது:நடப்பு ஆண்டு, 'நீட்' விண்ணப்பத்தில் புது அம்சங்கள் சேர்க்-கப்பட்டுள்ளன. அதற்கான செயல்முறைகள் விளக்கப்பட்டுள்-ளன. தனியார் பயிற்சி மையங்கள், தனியார் பள்ளிகளில் மாண-வர்களுக்கு, இவற்றை விளக்கி கூறி பள்ளியிலோ, வீட்டிலோ பதிவு செய்துகொள்கின்றனர். அரசு பள்ளி மாணவர்களை பொறுத்தவரை, பள்ளியில் மட்டும் பதிவேற்றம் செய்ய வேண்டி-யுள்ளது.முன்கூட்டியே தேவைப்படும் சான்றிதழ்கள், ஆதார், 10ம் வகுப்பு சான்றிதழில் உள்ள பெயர் உள்ளிட்ட விபரங்கள் ஒரே மாதிரி உள்ளனவா என, பல்வேறு விபரங்களை ஆசிரியர்கள் தெரிவிக்கவில்லை. விண்ணப்பிக்கும்போது, 'எரர்' காட்டிய பின், ஆதார் பெயர் மாற்றத்துக்கு அலைக்கழிக்கப்படுகின்றனர்.குறிப்பாக விண்ணப்பம் பதிவு செய்ய ஆசிரியர்களே தடுமாறு-கின்றனர். அதில் கைரேகை பதிவு, கையொப்பம் பதிவேற்றம் செய்வதில் மிகச்சரியாக இருந்தால் மட்டுமே, ஆன்லைனில் ஏற்-கிறது. இல்லை எனில் தொடர்ந்து, 'எரர்' வருகிறது. இதனால் தினமும், 2 மாணவர்களுக்கு கூட, விண்ணப்பம் பதிவு செய்ய முடியவில்லை. பல்வேறு பள்ளி ஆசிரியர்கள், 'பிரவுசிங் சென்-டர்'களுக்கு சென்று, விண்ணப்பம் பதிய அறிவுறுத்துகின்றனர்.விண்ணப்ப கட்டணம் செலுத்தவே தடுமாறும், அரசு பள்ளி மாணவர்கள், 'பிரவுசிங்' சென்டர்களுக்கும், பல, 100 ரூபாய் செலவு செய்ய வேண்டியுள்ளது. மேலும் மாணவர்களின் விப-ரங்கள் வெளியே கசிய வாய்ப்புள்ளது. அதனால் அனைத்து மாணவர்களுக்கும், பள்ளிகளில் விண்ணப்ப பதிவு செய்து தர, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்- நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை