உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / காந்திபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக தீர்த்தக்குட ஊர்வலம்

காந்திபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக தீர்த்தக்குட ஊர்வலம்

சேந்தமங்கலம், காந்திபுரம் பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று தீர்த்தக் குடம் ஊர்வலம் நடந்தது. சேந்தமங்கலம் அருகே உள்ள காந்திபுரம் அருந்ததியர் தெருவில் குடிகொண்டுள்ள மாரியம்மன் கோவிலில் வரும், 29ம் தேதி கும்பாபிஷேக விழா நடக்கிறது. அதையொட்டி நேற்று மாலை சேந்தமங்கலம் பழைய பஸ் ஸ்டாப் அருகில் உள்ள பெருமாள் கோவிலில் இருந்து மேள தாளங்கள் முழங்க தீர்த்தக் குடம் ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தில் காந்திபுரம் பகுதியைச் சேர்ந்தோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை