| ADDED : ஜூலை 15, 2024 01:09 AM
சேந்தமங்கலம்: 'சிப்காட்' திட்டத்தை கைவிட வலியுறுத்தி, நேற்று, 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாசி பெரியசாமி கோவிலில், பச்சை பூஜை செய்து வழிபட்டனர்.நாமக்கல் அருகே, என்.புதுப்பட்டி, வளையப்பட்டி, அரூர் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில், தமிழக அரசு, 'சிப்காட்' அமைக்க உள்ளது. இதற்கான நிலம் அளவீடு செய்யும் பணியில் வருவாய்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த திட்டத்ததால் விவசாயம், குடிநீர், சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என, இப்பகுதி விவசாயிகள், கடந்த ஓராண்டுக்கும் மேலாக பல்வேறு போராட்-டங்கள் நடத்தி வருகின்றனர்.ஆனால், 'சிப்காட்' திட்டத்தை அரசு கைவிடாமல் தொடர்ந்து இதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. இதனால், இப்பகுதி விவசாயிகள், நேற்று குழந்தைகளுடன், முத்துக்காப்பட்டி மாசி பெரியசாமி கோவிலில், 'சிப்காட்' திட்டத்தை ரத்து செய்ய வலியு-றுத்தி அதன் தலைவர் பாலசுப்பிரமணியம் தலைமையில், 100க்கும் மேற்பட்டோர் சுவாமிக்கு பச்சை பூஜை செய்து வழி-பாடு நடத்தினர்.