உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / இன்று கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம்

இன்று கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் இன்று ( 23ம் தேதி) கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடக்கிறது. நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள அறிக்கை: நாமக்கல் மாவட்டத்தில், கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம், நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு ஆர்.டி.ஓ.,கள் தலைமையில் இன்று காலை, 10:30 மணிக்கு நாமக்கல், திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்குகளில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் பயிர் சாகுபடிக்கு தேவையான நவீன தொழில்நுட்பங்கள், வேளாண் இடு பொருள் இருப்பு விவரங்கள், வேளாண் உழவர் நலத்துறை மற்றும் இதர துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் மானியத் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதுடன், தங்களது கோரிக்கைகளையும் தெரிவிக்கலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை