மேலும் செய்திகள்
வேன் மோதி முதியவர் சாவு
16-Sep-2024
ரூ.40 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை
17-Sep-2024
குண்டுமல்லி விலை உயர்வுஎருமப்பட்டி, செப். 28-குண்டுமல்லி பூக்கள் விலை கிலோ, 500 ரூபாயாக உயர்ந்ததால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். எருமப்பட்டி யூனியன், அலங்காநத்தம், பொட்டிரெட்டிப்பட்டி, கோம்பை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் குண்டுமல்லி பூக்களை பயிரிட்டுள்ளனர். இந்த பூக்களுக்கு தினசரி மார்க்கெட்டில் விலை நிர்ணயம் செய்யப்படுவதால், விசேஷ நாட்களில் குண்டுமல்லி பூக்களுக்கு நல்ல விலை கிடைக்கிறது. இந்நிலையில், இன்று புரட்டாசி, இரண்டாவது சனிக்கிழமையையொட்டி, நேற்று எருமப்பட்டி பகுதியில் குண்டுமல்லி பூக்கள் விலை உயர்ந்து கிலோ, 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
16-Sep-2024
17-Sep-2024