பல வழக்குகளில் சிக்கிய வாலிபருக்கு குண்டாஸ்
ப.வேலுார், ப.வேலுார், கபிலக்குறிச்சி அருகே ரங்கம்பாளையத்தை சேர்ந்தவர் துரைசாமி, 43. இவர் மீது நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த மாதம் 7ம் தேதி இரவு குடிபோதையில் வந்த துரைசாமி, வீட்டின் அருகில் இருந்தவர்களை இரும்பு பைப்பால் தாக்கினார். அதில் கைது செய்யப்பட்டு, நாமக்கல் சிறையில் அடைக்கப்பட்டார். துரைசாமி மீது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாக, பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதனால் குண்டர் சட்டத்தில் கைது செய்ய, நாமக்கல் எஸ்.பி., விமலா நேற்று உத்தரவிட்டார். நாமக்கல் சிறையில் இருந்த துரைசாமியிடம், குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கான நகலை, ஜேடர்பாளையம் போலீசார் கொடுத்தனர்.