மூதாட்டியை மிரட்டி அரை பவுன் பறிப்பு
மல்லசமுத்திரம், மல்லசமுத்திரம் அருகே, வட்டூர் கிராமம், பள்ளாங்காடு, உத்தண்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனியம்மாள், 78; இவர், தனியாக வசித்து வருகிறார்.இவரது மகன் பழனிவேல், 54; அதே பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த, 3 இரவு மூதாட்டி வீட்டிற்கு வந்த மர்ம நபர், அவரை மிரட்டி காதில் அணிந்திருந்த அரை பவுன் தங்க தோடை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து பழனிவேல் அளித்த புகார்படி, மல்லசமுத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.