மேலும் செய்திகள்
5 பவுன், ரூ.ஒரு லட்சம் திருட்டு
29-Sep-2025
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் அருகே, தாஜ்நகர் பகுதியை சேர்ந்தவர் ரதிதேவி, 40; இவரது கணவர் சீனிவாசன். தம்பதியர், அதே பகுதியில் ஜவுளி கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம், வழக்கம் போல் வியாபாரத்தை முடித்து விட்டு, இரவு, 10:00 மணிக்கு கடையின் ஷட்டரை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். நேற்று காலை, 9:00 மணிக்கு ரதிதேவி ஜவுளி கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். கடையின் உள்ளே சென்று பார்த்தபோது, மேஜை டிராயரில் இருந்து, 10,000 ரூபாய் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து பள்ளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து போலீசார், கண்காணிப்பு கேமரா பதிவை ஆய்வு செய்தனர். அதில், நள்ளிவில் வந்த மர்ம நபர்கள் மூன்று பேர், கடையின் ஷட்டரை உடைத்து உள்ளே சென்று பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. கைரேகை நிபுணர்கள், தடயங்களை சேகரித்தனர். நேற்று மாலை, பள்ளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
29-Sep-2025