உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அறுந்து தொங்கும் பசுமை பந்தல்; சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

அறுந்து தொங்கும் பசுமை பந்தல்; சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

நாமக்கல் : வெயிலில் இருந்து தப்பிக்க, போக்குவரத்து சிக்னலில் அமைக்கப்பட்ட, 'பசுமை பந்தல்' அறுந்து விபத்தை ஏற்படுத்த காத்திருப்பதால், சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நாமக்கல்லில், கடந்த மாதம் கத்திரி வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. அதன் வெப்பத்தால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வந்தனர். மேலும், போக்குவரத்து சிக்னலில் காத்திருக்கம் வாகன ஓட்டிகள் கொளுத்தும் வெப்பத்தால் அவதிக்குள்ளாகினர். அதை தவிர்க்கும் வகையில், திருச்செங்கோடு சாலை, சேலம் சாலை, கோட்டை சாலை, மோகனுார் சாலை, துறையூர் சாலை, நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் அருகே என, போக்குவரத்து சிக்னல் பகுதிகளில், நகராட்சி நிர்வாகம் சார்பில், பசுமை நிழல் வலை பந்தல் அமைக்கப்பட்டது.சிக்னலின் போது வாகன ஓட்டிகள் அதன் நிழலில் நின்று, வெயிலில் இருந்து தங்களை காத்துக்கொண்டனர். இந்நிலையில், மோகனுார் சாலை, அண்ணாதுரை சிலை அருகே உள்ள சிக்னலில் அமைக்கப்பட்ட, 'பசுமை பந்தல்' நேற்று காலை அறுந்து தொங்கி கொண்டிருந்தது. அந்த வலை, வாகன ஓட்டிகளின் தலையில் உரசி அச்சத்தை எற்படுத்தி வருகிறது.எனவே, அறுந்து தொங்கும், 'பசுமை பந்தலை' சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ