உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ராசிபுரம், சேந்தமங்கலம் பகுதியில் கனமழை

ராசிபுரம், சேந்தமங்கலம் பகுதியில் கனமழை

ராசிபுரம், ராசிபுரம், நாமகிரிப்பேட்டை சுற்று வட்டார பகுதியில் நேற்று மாலை, 5:00 மணியளவில் காற்றுடன் கன மழை பெய்தது. ராசிபுரம், பட்டணம், முத்துக்காளிப்பட்டி, கவுண்டம்பாளையம், சீராப்பள்ளி, அரியாகவுண்டம்பட்டி, தண்ணீர்பந்தல்காடு, மூலப்பள்ளிப்பட்டி, வெள்ளக்கல்பட்டி உள்ளிட்ட இடங்களில், 30 நிமிடம் மழை பெய்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.* சேந்தமங்கலம், காந்திபுரம், ராமநாதபுரம் புதுார் மற்றும் பல்வேறு இடங்களில் மாலை 5:00 மணியளவில் மழை தொடங்கியது, தொடர்ந்து 2 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.* வெண்ணந்துார் சுற்றுவட்டார பகுதியில், நேற்று மாலை வானம் கருமேகமாக சூழ்ந்து மழை கொட்டியது. ஆடி மாத தொடக்கத்தின் முதல் மழையால், மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். கால்நடைகளுக்கான புல்கள் பசுமையடையும் வகையில் மழை பெய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ