உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ராசிபுரம், நாமகிரிப்பேட்டையில் 2 மணி நேரம் கொட்டி தீர்த்த மழை

ராசிபுரம், நாமகிரிப்பேட்டையில் 2 மணி நேரம் கொட்டி தீர்த்த மழை

ராசிபுரம்,: ராசிபுரம் சுற்று வட்டார பகுதியில், நேற்று அதிகாலை சிறிது நேரம் துாறல் மழை பெய்தது. தொடர்ந்து, வானம் மேக மூட்டத்-துடன் காணப்பட்டது. காலை, 10:00 மணியளவிலம் வெயில் இல்லாமல் இருந்தது. அதன் பிறகு வழக்கம்போல் வெயில் கொளுத்தியது. இதையடுத்து, மாலை, 5:00 மணியளவில் இருந்தே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. திடீரென பலத்த காற்று வீசத்தொடங்கியயது. சிறிது நேரத்தில் இடி, மின்ன-லுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது. மாலை, 6:30 மணிக்கு தொடங்கிய மழை இரவு, 8:30 மணி வரை நீடித்தது.ராசிரத்தில் கனமழை பெய்ததால், பழைய பஸ் ஸ்டாண்ட், புதிய பஸ் ஸ்டாண்ட், புதுப்பாளையம் ரோடு ஆகிய பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.இதனால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ராசி-புரம் அடுத்த புதுப்பாளையம், கவுண்டம்பாளையம், அணைப்பா-ளையம், காக்காவேரி, சீராப்பள்ளி, நாமகிரிப்பேட்டை, ஆர்.புதுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது.நாமக்கல், மோகனுாரில்... நாமக்கல் நகரை பொறுத்த வரை, நேற்று காலை முதல் மாலை வரை வானம் மப்பும், மந்தாரமுமாக காணப்பட்டது. இரவு, 8:00 மணிக்கு, திடீரென மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இதனால், சாலையோ-ரங்களிலும், பள்ளமான பகுதிகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகள் மெதுவாக வாகனங்களை ஓட்டி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.இதேபோல், மோகனுார் பகுதியிலும், இரவு, 9:00 மணிக்கு மழை பெய்ய துவங்கியது. ஒரு மணி நேரத்துக்கு மேல் நீடித்தது. கொட்டித்தீர்த்த கோடை மழையால் மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை