ராசிபுரத்தில் கன மழை இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ராசிபுரம்: ராசிபுரம் பகுதியில், கடந்த, மூன்று நாட்களாக இரவு நேரத்தில் மழை பெய்து வருகிறது. கடந்த, 5ல் மாவட்டத்தில் அதிகளவாக ராசிபுரத்தில், 122 மி.மீ., மழை பதிவாகியிருந்தது. நேற்று முன்-தினம் இரவும் துாறல் மழை பெய்தது. நேற்று காலை முதல், வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.மதியம், 12:00 மணிக்கு திடீரென பெய்ய தொடங்கிய மழை, 30 நிமிடம் நீடித்தது. நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் துாறல் மழை மட்டுமே இருந்தது. பட்டப்பகலில் பெய்த திடீர் மழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.