உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / எல்.ஐ.சி., பீமா கிராமம் திட்டத்தில் உயர் கோபுர மின் விளக்கு அமைப்பு

எல்.ஐ.சி., பீமா கிராமம் திட்டத்தில் உயர் கோபுர மின் விளக்கு அமைப்பு

மல்லசமுத்திரம், பொரசல்பட்டி கிராமத்தில் எல்.ஐ.சி., பீமா கிராமம் திட்டத்தில், 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான உயர்மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டது.எல்.ஐ.சி., பீமா கிராமம் திட்டத்தில், ஒரு கிராமத்தில் ஒரு ஆண்டுக்கு, 50 பாலிசி மற்றும் 5 லட்சத்திற்கும் அதிகமான பிரிமியம் இருந்தால், அந்த கிராமத்தை எல்.ஐ.சி., தத்தெடுத்து இலவச திட்டப்பணிகள் செய்து தருகிறது. அதன்படி நேற்று, மல்லசமுத்திரம் அருகே, அக்கரைப்பட்டி பொரசல்பட்டி கிராமத்தில், எல்.ஐ.சி., சார்பில், 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான உயர் மின் கோபுரம் அமைக்கப்பட்டது. சேலம் முதுநிலை கோட்ட மேலாளர் அனந்தகுமார் தலைமை வகித்தார். பேபிராணி வரவேற்றார். சேலம் கோட்ட விற்பனை மேலாளர் சவுண்டப்பன், திருச்செங்கோடு கிளை முதுநிலை மேலாளர் நல்லதம்பி, மல்லசமுத்திரம் கிளை மேலாளர் ஜெகதீஸ் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ