உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மாற்றுத்திறன் மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி பயிற்சி

மாற்றுத்திறன் மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி பயிற்சி

நாமக்கல், நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில், அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படிக்கும், மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் பயிற்சி முகாம், நாமக்கல் மாவட்ட திட்ட அலுவலகத்தில், நேற்று நடந்தது.கருத்தாளர்களாக மாநில அலுவலகத்திலிருந்து பவதாரணி, கனகராஜ் ஆகியோர் பங்கேற்று, மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான மேற்படிப்பு வழிகாட்டுதல் நெறிமுறை மற்றும் மேற்படிப்பில் சேர்வதற்கான தகவல்களை வழங்கினர்.மேலும், கடந்தாண்டுகளில் இதுபோன்ற வழிகாட்டுதல் மூலம் பயன்பெற்று, சட்ட கல்லுாரியில் படித்து கொண்டிருக்கும் மாற்றுத்திறன் கொண்ட மாணவி ஸ்ரீயாழினி பங்கேற்று, மேற்படிப்புக்கான ஆலோசனை வழங்கி மாணவர்களை ஊக்குவித்தார். ஏற்பாடுகளை, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சிந்துஜா, கோமதி, கவிதா ஆகியோர் செய்திருந்தனர். சிறப்பு பயிற்றுனர்கள் ஆனந்த், செல்வகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி