நாமக்கல் : ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி - 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ், 2024-25ம் கல்வி ஆண்டில், அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளில் உயர்கல்வி வழிகாட்டி குழு செயல்படுத்துதல் குறித்த மாவட்ட அளவிலான முன் திட்டமிடல் கூட்டம், நாமக்கல் மாவட்ட திட்ட அலுவலகத்தில் நடந்தது.உதவி திட்ட அலுவலர் பாஸ்கரன் தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் புவனேஸ்வரி வரவேற்றார். வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர்கள், உயர்கல்வி வழிகாட்டுதல் ஆசிரியர்கள் என, மொத்தம், 46 பேர் பங்கேற்றனர்.மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதுகலை விரிவுரையாளர் சந்தோசம், விரிவுரையாளர் வேதராசபால்சன், ஜே.கே.கே., நடராஜா அரசு நிதி உதவி பெறும் கல்லுாரி என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் பாரதி, பரமத்தி வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர் அனிதாகுமாரி ஆகியோர் கருத்தாளர்களாக செயல்பட்டனர்.இப்பயிற்சியை தொடர்ந்து, அனைத்து வட்டார வளமையங்களிலும், வரும், 9ல், உயர்கல்வி வழிகாட்டல் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் நடக்கிறது. அதில், ஒவ்வொரு அரசு மேல்நிலைப்பள்ளிகளில் இருந்தும், தலைமையாசிரியர், உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர், பள்ளி மேலாண் குழு தலைவர், துணைத்தலைவர், இல்லம் தேடிக்கல்வி தன்னார்வலர், முன்னாள் மாணவர்கள் மற்றும் கல்லுாரி என்.எஸ்.எஸ்., மாணவர்கள் என, மொத்தம், 1,147 பேர் பங்கேற்க உள்ளனர்.