உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / போட்டி தேர்வுகளில் வெல்வது எப்படி பாவை கல்வி நிறுவனங்களில் பயிற்சி

போட்டி தேர்வுகளில் வெல்வது எப்படி பாவை கல்வி நிறுவனங்களில் பயிற்சி

நாமக்கல்: பாச்சல் பாவை கல்வி நிறுவனங்களில், யு.பி.எஸ்.சி., மற்றும் டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளில் வெல்வது எப்படி என்பது குறித்து, இலவச பயிற்சி முகாம் நடந்தது. நாமக்கல் கலெக்டர் உமா தலைமை வகித்தார். பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர் நடராஜன், கிங் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ்., அகாடமி நிர்வாக இயக்குனர் சத்யஸ்ரீ பூமிநாதன் ஆகியோர் பேச்சாளர்களாக கலந்து கொண்டனர். ஆனந்த விகடன் பப்ளிசர்ஸ் பிரைவேட் லிமிடெட் பத்திரிகையின் நிகழ்ச்சி மேலாளர் ரங்கராஜன் வரவேற்றார். நாமக்கல் கலெக்டர் உமா, 'ஏன் சிவில் சர்வீசஸ்' என்ற தலைப்பில் பேசினார். அவர், ''தமி-ழக அரசு, மாநில பயிற்சி மையம் மூலம், நான் முதல்வன் திட்-டத்தின் கீழ், அரசு பணிகளுக்கு முயற்சிக்கும் இளைஞர்களுக்கு மாதம், 7,500 ரூபாய் உதவித்தொகை வழங்குகிறது,'' என்றார், தொடர்ந்து, பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர் நடராஜன் வாழ்த்துரை வழங்கினார். கிங் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ்., அகாடமி இயக்குனர் சத்யஸ்ரீ பூமிநாதன், 'சிவில் சர்வீசஸ் தேர்-வுகள் பற்றிய கண்ணோட்டம்' என்ற தலைப்பில் பேசினார். நிகழ்ச்சியில் பாவை கல்வி நிறுவனங்களின் தாளாளர் மங்கை நட-ராஜன், இயக்குனர் (நிர்வாகம்) ராமசாமி, பாவை கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் எழிலி, ஊடக நண்பர்கள், பேராசிரி-யர்கள், பெற்றோர், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை