உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கணவன் இறந்த துக்கம் மனைவியும் உயிரிழப்பு

கணவன் இறந்த துக்கம் மனைவியும் உயிரிழப்பு

வெண்ணந்துார்: வெண்ணந்துார் டவுன் பஞ்., தங்கச்சாலை வீதியை சேர்ந்தவர் சதாசிவம், 71; இவரது மனைவி பாப்பா, 64; இவர்களுக்கு, 2 மகன்கள், 1 மகள் உள்ளனர். சதாசிவம், நேற்று முன்தினம் அதிகாலை மாரடைப்பால் உயிரிழந்தார். இதையடுத்து இறுதி சடங்கு ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது. துக்க நிகழ்வுக்கு வந்தவர்களுடன் சேர்ந்து தொடர்ந்து அழுதபடியே பாப்பா இருந்தார். இந்நிலையில், நேற்று காலை, 10:00 மணிக்கு மயங்கி விழுந்து அவரும் உயிரிழந்தார். கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் உயிரிழந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை