வாசகர்கள் கருத்துகள் ( 1 )
வணக்கம் ?✍️✍️✍️
மேலும் செய்திகள்
இன்று கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம்
23-Aug-2024
நாமக்கல்: ''மேட்டூர் உபரி நீரை, திருமணிமுத்தாறுடன் இணைத்து, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளம், குட்டைகளில் நிரப்பி, விவசாய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பேன்,'' என, நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன் கூறினார்.இதுகுறித்து, நிருபர்களிடம் அவர் கூறியதாவது: கொங்கு மண்டலத்தில் ஜவுளி தொழிலை மேம்படுத்த, மத்திய அமைச்சர் நேரில் வந்து ஆய்வு செய்ய உள்ளதாக கூறியுள்ளார். சங்ககிரி பகுதியில், சுதந்திர போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலை ஸ்துாபி மட்டுமே உள்ளது. அங்கு அவரது உருவச்சிலை அமைக்க, மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நாமக்கல் - சேலம் சாலை, பெருமாள் கோவில்மேடு, புதுச்சத்திரம், கருங்கல்பாளையம் பகுதியில், வாகன விபத்து அதிகம் நடப்பதால், அப்பகுதியில் மேம்பாலம் அமைக்க, மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். அதில், கருங்கல்பாளையம் பகுதியில் மேம்பாலம் அமைக்க அனுமதி கிடைத்துள்ளது.நாமக்கல் மாநகராட்சி கழிவுநீரால், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. சுத்திகரிப்பு நிலையம் விரிவுபடுத்தப்பட்டு, மாசு கட்டுப்பாடு வாரியம் மூலம், சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தண்ணீர் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மேட்டூர் உபரி நீரை திருமணிமுத்தாறுடன் இணைத்து, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளம் குட்டைகளில் நிரப்பி, விவசாய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.
வணக்கம் ?✍️✍️✍️
23-Aug-2024