உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / எதிர்ப்பு இருந்தால் மதுபார் அகற்றப்படும்

எதிர்ப்பு இருந்தால் மதுபார் அகற்றப்படும்

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே, கடை திறப்பு விழா-விற்கு அமைச்சர் முத்துசாமி, நேற்று வருகை தந்தார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், ''பள்ளிப்பாளையத்தில் செயல்-படும் தனியார் மதுபான பாருக்கு, பொதுமக்கள் எதிர்ப்பு தெரி-வித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.வீட்டு வசதி வாரியத்தில் நடைமுறையில் இருந்த தவணை முறை திட்டம் சரியாக நடக்கவில்லை. இதனால், மீண்டும் தவணை முறை திட்டம் வருவதற்கு வாய்ப்பு குறைவு,'' என்றார். செங்கோட்டையன், தி.மு.க.,விற்கு வந்தால் வரவேற்பீர்களா என்ற கேள்விக்கு, ''எல்லோரும் நல்லா இருக்கணும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ