உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வள்ளலார் சன்மார்க்க சபையில் தருமசாலை துவக்க விழா

வள்ளலார் சன்மார்க்க சபையில் தருமசாலை துவக்க விழா

நாமக்கல்: நாமக்கல், வள்ளலார் சன்மார்க்க அறக்கட்டளையின், 6ம் ஆண்டு தருமசாலை துவக்க விழா நடந்தது. பொதுமக்களின் பசியை போக்கும் வகையில், வடலுாரில், 1867 வைகாசி, 11ல் வள்ளலார் மூலம் அணையா அடுப்பு ஏற்றப்பட்டது. 158 ஆண்-டுகள் கடந்து செயல்பட்டு வருவதை கொண்டாடும் வகையில், நாமக்கல்-துறையூர் சாலை, கூலிப்பட்டியில் உள்ள வள்ளலார் சன்-மார்க்க சபையில் திருவருட்பா முற்றோதல் மற்றும் 6ம் ஆண்டு தருமசாலை துவக்க விழா நடந்து. மே, 18ல் துவங்கி, 23 வரை சுப்ரமணிய அடிகளார் சன்மார்க்க சாதுக்கள் தலைமயில் திருவருட்பா முற்றோதல் நிகழ்ச்சி நடந்-தது. தொடர்ந்து, 24ல் சன்மார்க்க கொடி கட்டும் விழா, நேற்று, அகவல் பாராயணத்துடன் தருமச்சாலை துவக்க நாள் நிகழ்ச்சி நடந்தது. இதில், நாமக்கல் அரங்க-நாதர் கோவில் படிவாசல் முன் மக்களுக்கு அன்னதானம் வழங்-கப்பட்டது. ஏற்பாடுகளை பிரம்மஸ்ரீ பாலச்சந்திரன் உள்ளிட்ட நிர்-வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை