பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் பஞ்., யூனியன் பகுதியில் பெரும்பாலான ஓட்டல், பேக்கரி, இறைச்சி கடை, டீ கடை, மளிகை கடை, தள்ளு வண்டி கடைகளில் பிளாஸ்டிக் கவர் பயன்பாடு அதிகரித்துள்ளது. பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள், சாலையோரத்தில் கொட்டப்படுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. பள்ளிப்பாளையம் யூனியன் பகுதியில், மீண்டும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளால், சாலையோரம், பொது இடங்கள், நீர்நிலை ஆகிய பகுதியில் அதிகளவு பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்துள்ளன. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளதற்கு இதுவே சாட்சியாக உள்ளது. எனவே, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து, பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.