உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / இந்திய சைகை மொழி தின விழிப்புணர்வு பேரணி

இந்திய சைகை மொழி தின விழிப்புணர்வு பேரணி

நாமக்கல், சர்வதேச காது கேளாதோர் தினம், இந்திய சைகை மொழி வாரம், செப்., 23 முதல், 29 வரை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதையொட்டி, நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், நாமக்கல் பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் நடந்த விழிப்புணர்வு பேரணியை, கலெக்டர் துர்கா மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.பேரணியில், காது கேளாதோர் மற்றும் வாய் பேச இயலாதோர் சங்கத்தினர், அரசு அலுவலர்கள், கல்லுாரி மாணவ, மாணவியர் மற்றும் தமிழக உரிமைகள் திட்ட களப்பணியாளர்கள் என, 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பேரணி, பழைய அரசு தலைமை மருத்துவமனையில் தொடங்கி மணிக்கூண்டு, பழைய பஸ் ஸ்டாண்ட் வரை சென்று மீண்டும் மருத்துவமனையை வந்தடைந்தது. இணை இயக்குனர் (நலப்பணிகள்) ராஜ்மோகன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கலைச்செல்வி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !