எக்ஸல் பொறியியல் கல்லுாரியில் புதுமை ஸ்டார்ட் அப் கண்காட்சி
குமாரபாளையம்:குமாரபாளையம் எக்ஸல் பொறியியல் கல்லுாரியில், இன்ஸ்டிடியூஷன் இன்னோவேஷன் கவுன்சில் சார்பில், புதுமை ஸ்டார்ட் அப் கண்காட்சி மற்றும் போஸ்டர் நிகழ்ச்சி நடந்தது.நாமக்கல் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புதுமை நிறுவன மாவட்ட திட்ட மேலாளர் வசுதேவன், நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இதில், வெளியூர் பங்கேற்பாளர்கள், 23 பேர், எக்ஸல் பொறியியல் கல்லுாரி மாணவர்கள், 81 பேர் இணைந்து, 15 போஸ்டர் அணி, 11 கண்காட்சி அணி என, மொத்தம், 104 மாணவர்கள் பங்கேற்றனர்.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரொக்க பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. மாநிலா வியாசகர் மற்றும் இன்ஸ்டிடியூஷன் இன்னோவேஷன் கவுன்சில் ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார், தலைமை ஒருங்கிணைப்பாளர் கருணாகரன் ஆகியோர் பங்கேற்றனர். மேலும், இதில் பங்கேற்ற இன்ஸ்டிடியூஷன் இன்னோவேஷன் கவுன்சில் ஒருங்கிணைப்பாளர்கள், நீதிபதிகள், மாணவ துாதர்கள், தன்னார்வலர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.