உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சார்பதிவாளர் அலுவலக கட்டுமான பணி ஆய்வு

சார்பதிவாளர் அலுவலக கட்டுமான பணி ஆய்வு

ராசிபுரம்: ராசிபுரத்தில் புதிய சார்பதிவாளர் அலுவலக கட்டடம் கட்டும் பணி, 1.35 கோடி ரூபாய் மதிப்பில் கடந்த, 2024ல் தொடங்கி-யது.ஆறு மாதங்களில் முடிக்க வேண்டிய பணி, 18 மாதங்களுக்கு மேல் ஆகியும் நடந்து வருகிறது. இதுவரை, 90 சதவீத பணிகள் நடந்து முடிந்துள்ளன.இந்நிலையில், நேற்று பொதுப்பணித்துறை தரக்கட்டுப்பாடு அதி-காரி செந்தில், ராசிபுரம் பொதுப்பணித்துறை அதிகாரி கார்த்தி-கேயன், ஆகியோர் கட்டடம் கட்டும் பணியை ஆய்வு செய்தனர்.இப்பணிகளை விரைந்து முடிக்க அறிவுரை வழங்கினர். இதே காலக்கட்டத்தில் கட்டுமானப்பணி தொடங்கிய நாமகிரிப்-பேட்டை சார்பதிவாளர் அலுவலகம் சில வாரங்களில் திறக்கப்-பட உள்ளது. ஆனால், ராசிபுரம் அலுவலகம் எப்போது திறக்கப்-பட உள்ளது என்பது கேள்விக்குறியாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை