உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நடமாடும் ஆய்வகம் மூலம் உடனடியாக மண்வள அட்டை

நடமாடும் ஆய்வகம் மூலம் உடனடியாக மண்வள அட்டை

நாமக்கல் : நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள அறிக்கை: திருச்செங்கோடு வேளாண் துறையின் கீழ், நடமாடும் மண்பரிசோதனை நிலைய வாகனம் உள்ளது. கிராமங்களுக்கு சென்று விவசாயிகளிடமிருந்து மண் மற்றும் நீர் மாதிரிகளை பெற்று ஆய்வு செய்து மண்வள அட்டை அன்றைய தினமே விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. முகாம் காலை, 9:00 மணிக்கு தொடங்குகிறது. மே, 9 ம் தேதி மல்லசமுத்திரம், செண்பகமாதேவி, 16ம் தேதி வெண்ணந்துார் அக்கரைப்பட்டி, 23ம் தேதி சேந்தமங்கலம், பள்ளம்பாறை, 30ம் தேதி கபிலர்மலை இருக்கூர் ஆகிய இடங்களில் வாகனம் வரவுள்ளது.விவசாயிகள் மண் மாதிரி மற்றும் நீர் மாதிரிகளை நேரடியாக மண்பரிசோதனை நிலையம், வசந்தபுரம் மற்றும் நடமாடும் மண்பரிசோதனை நிலையம் நாராயணம் பாளையத்திலும் வழங்கி ஆய்வு செய்து, மண்வள அட்டை பெற்று பயனடையலாம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்