உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / இடைநின்ற மாணவர் மீண்டும் பள்ளியில் சேர்க்கை

இடைநின்ற மாணவர் மீண்டும் பள்ளியில் சேர்க்கை

ப.வேலுார்: நாமக்கல் மாவட்டத்தில், பள்ளி இடைநின்ற மாணவ, மாணவி-யரை மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரு-கிறது. அதன்படி, பரமத்தி ஒன்றியம், கொண்டரசம்பாளையம் அரசு உயர்நிலை பள்ளியில், பத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவர் யோகராஜ் இடையில் நின்று விட்டார்.அதையடுத்து, மாவட்ட கல்வி அலுவலர் புருேஷாத்தமன், பள்ளி துணை ஆய்வாளர் பெரியசாமி, தலைமையாசிரியர் பாரதி ஆகியோர், இடை நின்ற மாணவன் யோகராஜ் வீட்டுக்கு நேற்று நேரில் சென்றனர்.தொடர்ந்து, மாணவரின் தாயார் ஜோதிமணி, தாத்தா, பாட்டி ஆகியோரிடம், கல்வியின் அவசியம், படித்த பின் கிடைக்கும் பலன்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுத்தனர். அதையடுத்து, பள்ளிக்கு மாண-வரை அழைத்து வந்த ஆசிரியர்கள் செல்வராணி, யுவராஜா, சுமதி ஆகியோர், மாணவரை மீண்டும், பத்தாம் வகுப்பில் சேர்த்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை