மேலும் செய்திகள்
சிலவரி செய்திகள்: நாமக்கல்
17-Feb-2025
தாய் மாயம் மகள் புகார்
02-Feb-2025
குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே விவசாயி கொலை செய்யப்பட்ட வழக்கில், ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் குமார பாளையம் அருகே கல்லாங்காட்டுவலசு, பெத்தாம்பாளையம் பகுதியில் வசித்தவர் அங்கமுத்து, 45, விவசாயி. இவருக்கும் எதிர் தரப்பினருக்கும் வழித்தட பிரச்னை இருந்தது. நேற்றிரவு, 8:30 மணியளவில் அதே பகுதியை சேர்ந்த எதிர் தரப்பினரான ஆறுமுகம், 60, தாயம்மா, 55, இவர்களின் மகள் கமலா, 38, மகன்கள் சுரேஷ், 35, ரமேஷ், 25, ஆகியோர், அங்கமுத்து வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கமுத்து, அவரது மனைவி சரஸ்வதி ஆகியோரை கடப்பாரை, தடி, கட்டையால் பலமாக தாக்கியுள்ளனர். இதில் அங்கமுத்து அதே இடத்தில் பலியானார். சரஸ்வதி பலத்த காயமடைந்தார். குமாரபாளையம் போலீசார், ஐந்து பேரிடமும் விசாரித்து வருகின்றனர்.
17-Feb-2025
02-Feb-2025