மேலும் செய்திகள்
புதிய மரக்கன்றுகள் நடும் பணி தீவிரம்
08-Oct-2025
ராசிபுரம்: பசுமை திருவிழாவையொட்டி, ராசிபுரம் பகுதியில் மரக்கன்று நட மாணவர்ளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ராசிபுரம் அடுத்த பட்டணம் கலாம் பசுமை இயக்கம் மற்றும் கோவை ராமகிருஷ்ணா மிஷின் வித்யாலயா, கல்லுாரி முன்னாள் மாணவர்கள் சங்கம் ஆகியவை இணைந்து, இன்று பட்டணத்தில் உள்ள பொன்மலை கோவிலில் பசுமை திருவி-ழாவை நடத்த உள்ளன.இதில் மரக்கன்றுகள் நட இப்பகுதி இளைஞர்கள், மாணவர்க-ளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். காலை, 10:00 மணிக்கு நடக்கும் விழாவிற்கு ஆனந்தா கல்வி நிறுவன தலைவர் சக்-திவேல் வரவேற்கிறார். கலாம் பசுமை இயக்க தலைவர் மாணிக்கம் தலைமை வகிக்கிறார். முன்னாள் மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார் மரக்கன்று நடும் பணியை தொடங்கி வைக்கிறார்.
08-Oct-2025