உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கழிவுநீர் சுத்திகரிக்கும் திட்டத்தை பயன்படுத்தி கொள்ள அழைப்பு

கழிவுநீர் சுத்திகரிக்கும் திட்டத்தை பயன்படுத்தி கொள்ள அழைப்பு

நாமக்கல், நாமக்கல் மாநகராட்சி கமிஷனர் சிவக்குமார் வெளியிட்ட அறிக்கை:மாநகராட்சி பகுதிகளில், புதை சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விடுபட்டுள்ள பகுதிகளில் இத்திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்திட்ட பணிக்காகவும், 5 ஆண்டுக்கு இயக்குதல் மற்றும் பராமரித்தல் பணிக்காகவும் தமிழ்நாடு காலநிலை தாங்கும் நகர்ப்புற வளர்ச்சித் திட்டம், 211.83 -கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உத்தரவு வழங்கப்பட்டது.இத்திட்டத்தில், 11.13 எம்.எல்.டி., கொள்ளளவு கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், மாநகராட்சிக்கு சொந்தமான கொசவம்பட்டி உரக்கிடங்கு பகுதியில், 2026 செப்.,30-க்குள் நிறுவப்பட உள்ளது. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வெளியேறும் சுத்திகரிக்கப்பட்ட நீரை, விவசாயம், இதர தொழிற்சாலைகள் பயன்பாட்டிற்கு பயன்படுத்தி கொள்ளலாம்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !