உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / 8 தாலுகா அலுவலகத்தில் 15ல் ஜமாபந்தி தொடக்கம்

8 தாலுகா அலுவலகத்தில் 15ல் ஜமாபந்தி தொடக்கம்

நாமக்கல், 'மாவட்டத்தில் உள்ள, எட்டு தாலுகா அலுவலகங்களில், 1434ம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம்' வரும், 15ல் தொடங்குகிறது என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:நாமக்கல் தாலுகா அலுவலகத்தில், கலெக்டர் தலைமையில், வரும், 15 முதல், 28 வரை ஜமாபந்தி நடக்கிறது. ராசிபுரம் தாலுகா அலுவலகத்தில், டி.ஆர்.ஓ., சுமன் தலைமையில், 15 முதல், 27 வரையும், கொல்லிமலை தாலுகா அலுவலகத்தில், நாமக்கல் ஆர்.டி.ஓ., சாந்தி தலைமையில், வரும், 15 முதல், 16 வரையும் நடக்கிறது.சேந்தமங்கலம் தாலுகா அலுவலகத்தில், மாவட்ட கலால் துறை உதவி ஆணையர் தலைமையில், 15 முதல், 27 வரையும், மோகனுார் தாலுகா அலுவலகத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தலைமையில், 15 முதல், 23 வரை ஜமாபந்தி நடக்கிறது. திருச்செங்கோடு தாலுகா அலுவலகத்தில், ஆர்.டி.ஓ., சுகந்தி தலைமையில், வரும், 15 முதல், 30 வரையும், ப.வேலுார் தாலுகா அலுவலகத்தில், சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் பிரபாகரன் தலைமையில், வரும், 15 முதல், 28 வரையும், குமாரபாளையம் தாலுகா அலுவலகத்தில், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் தலைமையில், வரும், 15 முதல், 20 வரையும் ஜமாபந்தி எனும் வருவாய் தீர்வாயம் நடக்கிறது.வருவாய் தீர்வாயம் சனி, ஞாயிறு, திங்கள், அரசு விடுமுறை நாட்கள் மற்றும் வரும், 21 தவிர மற்ற நாட்களில், காலை, 10:00 மணி முதல் நடக்கும். அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டு, வருவாய் தீர்வாய அலுவலரால், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களின் மீதான குறைகளை நிவர்த்தி செய்வர்.மாவட்ட பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தங்களது கோரிக்கை மனுக்களை வருவாய் தீர்வாய அலுவலரிடம் அளித்து பயன் பெறலாம்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி