கிருஷ்ணராயபுரத்தில்மல்லிகை விலை உயர்வு
கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், மல்லிகை பூக்கள் வரத்து சரிவு காரணமாக விலை உயர்ந்துள்ளது.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட செக்கணம், எழுதியாம்பட்டி, சேங்கல், மலைப்பட்டி, தாளியாம்பட்டி, கரட்டுப்பட்டி, மலையாண்டிப்பட்டி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் மல்லிகை பூக்கள் சாகுபடி செய்து வருகின்றனர். கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. கடுமையான வெப்பம், பூக்கள் வரத்து சரிவு ஆகிய காரணங்களால் விலை உயர்ந்துள்ளது.கடந்த வாரத்தில் மல்லிகை பூ கிலோ, 250 ரூபாய்க்கு விற்றது. நேற்று, 450 ரூபாய்க்கு விற்பனையானது. மல்லிகை பூக்களை பறித்து கரூர், திருச்சி, குளித்தலை, முசிறி ஆகிய பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.