உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / குமாரபாளையம் அஞ்சலகம் இன்று முதல் இடம் மாற்றம்

குமாரபாளையம் அஞ்சலகம் இன்று முதல் இடம் மாற்றம்

நாமக்கல்: குமாரபாளையத்தில், தற்போது செயல்பட்டு வந்த துணை அஞ்ச-லகம் இன்று (டிச.,26) முதல் இடம் மாற்றம் செய்யப்படுகிறது.இது குறித்து, நாமக்கல் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் இந்-திரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:நாமக்கல் அஞ்சல் கோட்டத்திற்கு உட்பட்ட, குமாரபாளையம் துணை அஞ்சலகம் தற்போது காந்திநகர் இரண்டாவது தெருவில் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று முதல் குமாரபாளை-யத்தில் உள்ள, 161/பி1, கலைமகள் தெரு, என்ற முகவரிக்கு மாற்றம் செய்யப்படுகிறது. எனவே, பொதுமக்கள் குமார பா-ளையம் துணை அஞ்சலகத்தின் அனைத்து சேவைகளையும், புதி-தாக இடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ள புதிய கட்டடத்தில் பெற்று பயன்பெறலாம்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ