உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பெரியசாமி கோவில் கும்பாபிஷேக விழா

பெரியசாமி கோவில் கும்பாபிஷேக விழா

சேந்தமங்கலம், சேந்தமங்கலம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே அமைந்துள்ள வாசலுார் பெரியசாமி மற்றும் காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று காலை விமரிசையாக நடந்தது.முன்னதாக, நேற்று முன்தினம் காலை தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. மாலை, யாக வேள்வி அமைத்து முதல் கால பூஜை நடந்தது. நேற்று காலை, 5:00 மணிக்கு, இரண்டாம் கால பூஜை முடிந்து, வாசலுார் பெரியசாமி மற்றும் காமாட்சி அம்மன் சுவாமிக்கு கலசநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. சேந்தமங்கலம் சுற்று வட்டாரத்தில் உள்ள பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை