உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / இ-பைலிங் முறை கட்டாயமாக்கப்பட்டதை கண்டித்து வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

இ-பைலிங் முறை கட்டாயமாக்கப்பட்டதை கண்டித்து வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

நாமக்கல்: 'இ--பைலிங்' முறையை கட்டாயமாக்கப்பட்டுள்ளதை கண்டித்து, நாமக்கல் வக்கீல்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுப்பட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழகம் முழுவதும், நீதிமன்றங்களில் டிஜிட்டல் முறையில் வழக்குகள் பதிவு செய்யும், 'இ- பைலிங்' முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், போதிய கட்டமைப்பு வசதிகளான இணையதள வசதி, கணினிகள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்' எனக்கோரி, தமிழகம் முழுவதும் வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அதன்படி, நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல்கள் சங்க கூட்டுக்குழு சார்பில், பணி புறக்கணிப்பு செய்து, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டுக்குழு மாநில துணைத்தலைவர் பிரபாகரன் தலைமை வகித்தார். 'இ--பைலிங்கிற்கான போதிய இணையதள வசதி, தொழில் நுட்ப திறன் கொண்ட நீதிமன்ற ஊழியர்களை நியமிக்க வேண்டும். இ--பைலிங்கிற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்தி கொடுக்கும் வரை, பழைய நடைமுறையை பயன்படுத்த வேண்டும் என, கோரிக்கை விடுத்து கோஷம் எழுப்பினர். வக்கீல்கள் சங்க கூட்டுக்குழு நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். நீதிமன்ற பணி புறக்கணிப்பு காரணமாக, வழக்கமாக பணிகள் முடங்கியது.* திருச்செங்கோடு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, வக்கீல்கள் சங்க தலைவர் ரவி தலைமை வகித்தார். அதில், 35க்கும் மேற்பட்ட ஆண், பெண் வக்கீல்கள் பங்கேற்று கோஷம் எழுப்பினர்.* ராசிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன், ராசிபுரம் குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் தங்கதுரை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வரும், 12 வரை வக்கீல்கள் நீதிமன்றத்தை புறக்கணிப்பதாகவும் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை