மேலும் செய்திகள்
வடிகால் வசதி ஏற்படுத்தி தர மக்கள் வலியுறுத்தல்
09-Jul-2025
எலச்சிபாளையம், குமாரமங்கலம் அருகே உள்ள ரிங் ரோடு பகுதியில், மின் விளக்கு இல்லாததால் இரவில் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.எலச்சிபாளையம் அடுத்த குமாரமங்கலம் மாதா கோவில் பஸ் ஸ்டாப் அருகே திருச்செங்கோடு, ராசிபுரம், நாமக்கல் சாலை, சங்ககிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல சில மாதங்களுக்கு முன், ரிங்ரோடு அமைக்கப்பட்டது. இதில், தினமும் இரவு பகல் பாராமல் எண்ணற்ற இருசக்கர, கனரக, இலகுரக வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால், இதுவரை மின்விளக்குகள் ஏதும் அமைக்கப்படவில்லை. இதனால் இரவில் செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் போதிய வெளிச்சமின்றி கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, ரிங்ரோடு பகுதியில் மின்விளக்குகள் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
09-Jul-2025