உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஆன்லைன் அபராதத்தால் வாழ்வாதாரம் கடும் பாதிப்பு வரும் ஜன., பொதுக்குழுவில் ஸ்டிரைக் அறிவிக்க முடிவு

ஆன்லைன் அபராதத்தால் வாழ்வாதாரம் கடும் பாதிப்பு வரும் ஜன., பொதுக்குழுவில் ஸ்டிரைக் அறிவிக்க முடிவு

நாமக்கல்: ''ஆன்லைன் அபராதத்தால், எங்களின் வாழ்வாதாரம் கடுமை-யாக பாதிக்கப்பட்டுள்ளது. அதனால், 'வேலை நிறுத்த போராட்டம்' அறிவிக்கலாமா? என, 2025 ஜன.,ல் நடக்கும் பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்படும்,'' என, மாநில லாரி உரி-மையாளர்கள் சம்மேளனம், தமிழக தலைவர் தன்ராஜ் கூறினார்.மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம், தமிழகத்தின் செயற்குழு கூட்டம், நாமக்கல்லில் நேற்று நடந்தது. சம்மேளன தலைவர் தன்ராஜ் தலைமை வகித்தார். பொருளாளர் தாமோ-தரன், இணை செயலாளர் ராஜேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.தொடர்ந்து, சம்மேளன தலைவர் தன்ராஜ் கூறியதாவது:சரக்கு லாரிகள், வாகனங்கள் மீது, 'ஆன்லைன்' அபராதம் விதிக்கும் நடைமுறையில், லாரி உரிமையாளர்கள் பாதிக்காத-வாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக அரசிடம் பல-முறை கோரிக்கை வைத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தவறிழைக்கும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்-கலாம். ஆனால், எந்த விதிமீறலும் இல்லாத லாரிகள் மீது, 'ஆன்லைன்' அபராதம் விதிக்கப்படுகிறது. இதனால், லாரி உரி-மையாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. லாரி ஒன்றுக்கு, 40,000 முதல், 50,000 ரூபாய் வரை, 'ஆன்லைன்' அபராதம் விதிக்கப்படுவதால், இந்த தொழிலை மேலும் நலிவடைய செய்துள்ளது.வரும், 2025 ஜன., இரண்டாவது வாரத்தில், பொதுக்குழு கூட உள்ளது. இந்த கூட்டத்தில், மேற்கண்ட பிரச்னை குறித்து, மாநில சம்மேளன லாரி உரிமையாளர்கள் முடிவு எடுத்து, வாழ்-வாதாரத்தை தற்காத்துக்கொள்ளும் வகையில், 'வேலை நிறுத்த போராட்டம்' அறிவிக்கலாமா என்பது குறித்து முடிவெடுக்கப்-படும்.லாரிகளுக்கு ஜி.பி.ஆர்.எஸ்., முறையில் சுங்கம் வசூலிக்க மத்-திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிகிறது. எவ்வளவு கி.மீ., நெடுஞ்சாலையில் பயணிக்கிறோமோ அந்த அளவிற்கு சுங்கம் ஆன்லைனில் வசூலிக்கப்படும் என்ற புதிய முறை, ஜி.பி.ஆர்.எஸ்., மூலம் வரவுள்ளது. இதுகுறித்து, ஆல் இந்தியா மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ், மத்திய,- மாநில அரசிடம் தங்கள் நிலைப்பாட்டை அறிவிப்பார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ