உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கிராவல் மண் ஏற்றிசென்ற லாரி பறிமுதல்

கிராவல் மண் ஏற்றிசென்ற லாரி பறிமுதல்

எருமப்பட்டி யூனியன், பீமநாய்க்கனுாரில் போலீசார் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது, பாலப்பட்டியில் இருந்து வளையப்பட்டி ‍நோக்கி டிப்பர் லாரி சென்றது.போலீசார் சோதனை செய்த போது, டிப்பர் லாரியில் கிராவல் மண் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, டிப்பர் லாரியை ஓட்டி வந்த பாலப்பட்டியை சேர்ந்த டிரைவர் ராமநாதன், 41, என்பவரிடம் போலீசார் மண் கொண்டு செல்வதற்கான பர்மிட் கேட்டுள்ளனர். அவர் இல்லை என தெரிவித்துள்ளார். இதனால், லாரியை பறிமுதல் செய்த போலீசார், ராமநாதனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை