கஞ்சா விற்ற லாரி டிரைவர் கைது
சேந்தமங்கலம்:சேந்தமங்கலம் அருகே, பச்சுடையாம்பட்டியை சேர்ந்தவர் தர்மேந்திரன், 49; லாரி டிரைவர். இவர், லாரிக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வரும்போது, வெளியூரில் இருந்து கஞ்சா வாங்கிக்கொண்டு வந்து நண்பர்களுக்கு கொடுத்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த சேந்தமங்கலம் போலீசார், கண்காணித்து வந்தனர். இந்நிலையில், நேற்று தர்மேந்திரன் லாரியில் இருந்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவரை பின் தொடர்ந்த போலீசார், வாங்கி வந்த கஞ்சாவை நண்பர்களுக்கு கொடுத்த போது தர்மேந்திரனை கைது செய்தனர்.