மேலும் செய்திகள்
கூழாங்கல் கடத்தல் டிப்பர் லாரி பறிமுதல்
20-Nov-2024
ப.வேலுார்: -ஜேடர்பாளையம் அருகே, கண்டிபாளையத்தை சேர்ந்த நேரு மகன் தமிழ்செல்வன், 28. இவர், கொத்தமங்கலத்தில் உள்ள ஒரு பட்டா நிலத்தில், கிராவல் மண் எடுத்து வருவதாக நாமக்கல் புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நாமக்கல் புவியியல் மற்றும் சுரங்கத்துறை புவியியலாளர் நந்தகுமார் தலைமையிலான அலுவலர்கள், டிப்பர் லாரியை பறிமுதல் செய்து ஜேடர்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் லாரியை பறிமுதல் செய்து, தமிழ்செல்வனை பரமத்தி கிளை சிறையில் அடைத்தனர்.
20-Nov-2024