உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ப.வேலுாரில் லாட்டரி பறிமுதல்; 2 பேர் கைது

ப.வேலுாரில் லாட்டரி பறிமுதல்; 2 பேர் கைது

ப.வேலுார், ப.வேலுார் டி.எஸ்.பி., சங்கீதா உத்தரவுபடி, எஸ்.ஐ., சீனிவாசன் தலைமையிலான போலீசார், ப.வேலுார், குப்புச்சிபாளையம் பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, வெளி மாநில சீட்டுகளை பத்துக்கு மேற்பட்ட ஏஜென்டுகளை வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த லாட்டரி கடை மேலாளர் குப்புச்சிபாளையத்தை சேர்ந்த அருண்குமார், 29, திண்டுக்கல்லை சேர்ந்த முருகப்பெருமாள், 32, ஆகியோரை கைது செய்து, 550 வெளி மாநில லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி